சூன்ய திதி சூன்ய ராசி

Posted by kesaven guptha

திதி சூன்யம்

பஞ்சாங்க அங்கத்தில் திதி-வாரம்- நட்சத்திரம்-யோகம்-கரணம் முக்கிய மாகும். இதில் திதி என்பது ஆகாயத்தில் ஒரு குறித்த இடத்திலிருந்து சூரியனுக்கும்- சந்திரனுக்கும் உள்ள தூரமாகும். 15 திதிகளில்

அமாவாசை- பவுர்ணமி நாட்களில் பிறந்தவர்களுக்கு எவ்வித திதி சூன்ய தோஷமும் இல்லை.

மற்ற 14 திதிகளில் பிறந்த வர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது. இவைகளை கவனிக்கா மல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது.

இந்த திதிகளில் சதுர்த்தசியில் ஒருவர் பிறந்து இருந்து புதனும் - குருவும் ஜாதகத் தில் உச்ச நிலையில் இருந்தாலும் பலன்கள் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களை யும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

திதி சூன்யம் பெற்ற மேற்படி கிரகங்கள் ஆட்சி- உச்சம் பெற்றாலும் கேந்திர- திரிகோணமாக அமைந்தாலும் நல்ல பலனை அளிப்பதற்கு மாறாக தீய பலனை அல்லது பலனே இல்லாமல் செய்கிறது. மேற்படி திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் வக்ர கதியில் இருக்கும் போதும்,

சிம்மம்- விருச்சிகம்- கும்ப-மேஷ ராசியில் இருக்கும் போதும் சூன்ய தோஷ நிவர்த்தி பெறுகிறது. 1, 5, 9 ஆகிய கிரகங்களின் சாரம் பெ றும் போதும், திருவாதிரை- சுவாதி- சதயம் என்னும் ராகுவின் நட்ச த்திரக் காலில் இருக்கும்போதும் சூன்யதோஷ நிவர்த்தியைப் பெறுகி றது. இப்படிப்பட்ட நிலையில் சூன்ய தோஷத்தை மட்டும் பார்க்கா மல் தோஷ நிவர்த்தியையும் ஆராய்ந்து பார்த்து பலன் சொன்னால்
போற்றுகின்ற ஜோதிட நூல் பொய்யாது ஒருநாளும்
என்கிற ஜோதிட பாடலின்படி ரண பலமும், நலமும் பெற முடியும் என்பதே ஆய்வு

சூன்ய திதி சூன்ய ராசி சூன்ய
1. பிரதமை திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி
2. துதியை திதி தனுசு-மீனம் குரு
3. திருதியை திதி மகரம்-சிம்மம் சனி-சூரியன்
4. சதுர்த்தி திதி கும்பம்-ரிஷபம் சனி-சுக்கிரன்
5. பஞ்சமி திதி மிதுனம்-கன்னி புதன்
6. சஷ்டி திதி மேஷம்-சிம்மம் செவ்-சூரியன்
7. ஸப்தமி திதி தனுசு-கடகம் குரு-சந்திரன்
8. அஷ்டமி திதி மிதுனம்-கன்னி புதன்
9. நவமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்
10. தசமி திதி சிம்மம்-விருச்சிகம் சூரியன்-செவ்வாய்
11. ஏகாதசி திதி தனுசு-மீனம் குரு
12. துவாதசி திதி துலாம்-மகரம் சுக்கிரன்-சனி
13. திரயோதசி திதி ரிஷபம்-சிம்மம் சுக்கிரன்-சூரியன்
14. சதுர்த்தசி திதி மிதுனம்-கன்னி புதன்-குரு தனுசு-மீனம்

ANNAPOORNA STELLAR ASTROLOGICAL RESEARCH FOUNDATION

Posted by kesaven guptha


"KP Hora Rathna" R.Kesava Narayana Guptha D.A,B.A (Astrology)
ANNAPOORNA STELLAR ASTROLOGICAL RESEARCH FOUNDATION
23/3 ITTERI MAIN ROAD,
KONDALAMPATTY,
SALEM 636010

(Inclides Natal, Horary 249/2193, Rectification of Birth Time , Vagragati Chart, Progressed Chart, Marrage Mathing (traditional/kpdp), instat Dasa, Bukthi,AnthraUpto hours/Minute,manai Adi Yanthras/Manthras/Chakras-Ragu,Emaganda, Sudha Hora,Tharabalan,Sunrise Time)
Mail - kesavenguptha@gmail.com
kesavenguptha@yahoo.co.in
kesavenguptha@hotmail.com
kesavenguptha@rediffmail.com